அதிமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுக்கான கூட்டணி இன்று இறுதியானது. அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐந்து இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் ராமநாதபுரம் தொகுதிக்கு பா.ஜெயபெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதி. கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக அன்வர் ராஜா இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதே மாவட்டத்தில் அதிமுகவிற்கு வாய்ஸ் உள்ள பல வேட்பாளர்களும் இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் நன்கு அறிமுகமான முக்கிய புள்ளிகள் இருக்கும் போது அங்கே உள்ளவர்களை நியமிக்காமல் விருதுநகரில் இருந்து ஜெயபெருமாளை கொண்டு வந்து இங்கே வேட்பாளராக இபிஎஸ் அறிவித்துள்ளார். வேற்று மாவட்ட நபரை இங்கு அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளது திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அதே சமயம் பாஜகவிற்கும் சாதகமாக மாறி உள்ளது. பாஜக கூட்டணிக்கு இரண்டாம் இடம் விட்டு தர வழிவகை செய்யும் வகையில் அதிமுகவின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இது கட்சியினர் மத்தியிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.