
ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து சோம்பிர், ரந்தீர், தரம்பால் ஆகிய மூவரும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். அத்துடன் நாட்டின் நலன் கருதி காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், பாஜக கூட்டணி பெரும்பான்மையை இழக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.