
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆக இருக்கிறார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மநீம கூட்டணியில் இணைந்த அவர் தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்டி அவர்களது கூட்டணியில் இணைந்து இருக்கிறார்.