பாஜகவில் இருந்து விலகி மேலும் 2 முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் லதா மற்றும் தாம்பரம் ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பாஜகவில் இருந்து விலகி அவர்கள் அதிமுகவில் இணைந்ததாக சி டி ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே பாஜகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.