இந்தியாவில் தற்போது புதிய வகை இன்ஃப்ளுயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த புதிய வைரஸ் தொற்று குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அந்த வைரஸ் தொற்று பரவுவது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர்களுக்கு இருமல், சளி, தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு, 7 நாள் காய்ச்சல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினால் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது இந்த வைரஸ் தொற்று குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ள நிலையில் காய்ச்சலால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் வருகின்ற 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவ முகாம் சென்னையில் 200 இடங்களிலும், கிராமப்புறங்களில் 800 இடங்களிலும் நடைபெற இருக்கிறது. மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கொசு உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.