
பிரான்சில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் உள்ளது. இது பாரிஸில் உள்ள மிகவும் பிரபலமான உலகப் புகழ் பெற்ற ஒரு உயர்ந்த கோபுரம். தற்போது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீங்க திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து 1200 சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்குள்ள எலிவேட்டரில் ஏற்பட்ட பிரச்சினை தான் தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் தற்போது தீயணைப்பு துறையினரும் வாகனங்களும் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் மீது திடீரென தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.