ஆந்திர மாநிலத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் பலத்த காயமடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் மீனா தெரிவித்ததாவது: “பட்டாசு உற்பத்தி பிரிவு உரிமம் பெற்ற ஒன்றாகும். இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது உரிமம் பெற்ற தொழிற்சாலை என நினைக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.