நௌஷேரா எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவ முயற்சி செய்வதாக கூறப்படும் நிலையில், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவுகள், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ட்ரோன்களை துல்லியமாகக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தியுள்ளன. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததும், ராணுவ கண்காணிப்பு அமைப்புகள் உடனடியாக செயல்பட்டன. நவீன வான் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலின் போது சில பகுதி கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தை அடுத்து நௌஷேரா மற்றும் அதை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் எந்தவித அத்துமீறலையும் அனுமதிக்க மாட்டோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றது.