
தமிழகத்தில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்றவைகளுக்கு விடுமுறை. அதே நேரத்தில் பத்திரப்பதிவாளர் அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதாவது மங்களகரமான நாளில் பலரும் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். மேலும் இதன் காரணமாக நாளை தைப்பூச நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.