
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் நேற்று மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு தொடர்ந்து கொல்கத்தாவில் பதற்ற நிலை நீடிக்கிறது. குறிப்பாக முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் 150 mg விந்தனுக்கள் இருந்ததாகவும் உடம்பில் பல இடங்களில் காயம் இருப்பதாகவும் தெரிய வந்ததால் கூட்டு பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தொடர் பதற்றம் நீடிப்பதோடு குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க இருக்கிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய அமர்வு விசாரிக்க இருக்கிறது. மேலும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்ட் 20 விசாரணைக்கு வருகிறது.