தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி படமாக அமைந்தது. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வில்லன், குணச்சித்திர வேடம் மற்றும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் twitter இல் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பான வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அர்ஜுன் சம்பத் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு ரூ.4000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.