தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சற்று முன் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அவர் தற்போது சாலை மார்க்கமாக காரில் நாமக்கல் செல்கிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்குள் ஒருவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் போலி அடையாள அட்டையுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை துப்பாக்கி முனையில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திய நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இப்படி ஒரு விபரீத செயலை செய்ததாக கூறினார்.
மேலும் இதைத்தொடர்ந்து அவரை கடும் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
