
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்று சவரனுக்கு 1050 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 7045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7550 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 60,400 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் அதே சமயத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 101 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 1000 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் தங்கம் விலை 13 நாளில் சவரனுக்கு ரூ. 3,280 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.