ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் சுயேச்சைகள் உட்பட 77 பேர் போட்டியிட்டனர்.  பிப்ரவரி 27 நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 74. 79 சதவீத  வாக்குகள் பதிவாகின.

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து என்னப்பட்டது. 397 தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும். 15 சுற்றுக்கள் வரை வாக்குகள் என்னப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தற்போது  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில் இடைத்தேர்தலில் பதிவான 397 தபால் வாக்குகள் எண்ணபட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.