தென்கொரியாவில் ராணுவ அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அதிபர் ஹான் டக்சூ தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்கொரியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அதிபர் ராஜினாமா செய்து விட்டார். தென்கொரிய மக்கள் கட்சி சார்பில் ஹான் டக்சூ மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்குவதால் அவர் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தற்காலிக அதிபராக சோய் சாங் மோக் என்பவர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.