தமிழ்நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி கோவில்பத்து VAO லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில், மாரிமுத்து, ராமசுப்புவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மணல் திருட்டை தடுத்ததால், அலுவலகத்திற்குள் புகுந்து லூர்துவை வெட்டி அவர்கள் கொடூரமாக கொன்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கியதுடன், கொலையாளிகளுக்கு 3,000 அபராதமும் விதித்தது.