மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான அஜித் பவார், பாராமதியில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை பாராமதிக்கு விமானத்தில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த அவரது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அஜித் பவாரின் மறைவுச் செய்தி கேட்டதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நிலையில் தற்போது அஜித் பவாருடன் விமானத்தில் சென்று ஐந்து பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை 8:45 மணிக்கு நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.