
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இவரின் இந்த கருத்துக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் சனாதன தர்மம் விவாகரத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எந்த ஒரு புதிய வழக்கும் பதிய கூடாது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலை தடை தொடரும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் புதிதாக மனு தொடர்ந்த அனைத்து எதிர் மனுதாரர்களுக்கும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.