இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் நேரில் சென்று ஆதரவு கேட்டார். அந்தக் கட்சியின் தலைவர் காதர் மொய்தினிடம் அவர் ஆதரவு கேட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வோம். தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களால் ஆதரவு தர முடியாது என அருண் ராஜிடம் நேருக்கு நேராகவே காதர் மொய்தீன் கூறிவிட்டார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களையும் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு கோரிவரும் நிலையில் தமிழக அரசியல் களம் இன்னும் சில நாட்களுக்கு பரபரப்பாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.