
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் எப்போதும் பெரியார் மற்றும் திராவிடத்திற்கு ஆதரவாக பேசுவார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார். அவர் நீண்ட காலமாகவே அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியதாகவும் தற்போது அப்பா சம்மதத்துடன் அரசியலில் இணைந்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் திமுக கட்சியில் இணைந்த திவ்யா சத்யராஜுக்கு தற்போது மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று குன்னம் ராஜேந்திரன், கே வி எஸ் சீனிவாசன் ஆகியோர் வர்த்தகர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதூர் ஏ. ராமலிங்கம் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.