
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய வழக்கறிஞர்களின் ஒருவராக இருந்தவர் ஜோதி. இவர் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இவர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தியவர். இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மீது அதிருப்தியில் இருந்தார்.
இதன் காரணமாக அவர் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார். ஆனால் அவர் திமுகவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் அவர் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் அவர் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு திமுக அடையாள அட்டையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.