தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கேட்டு சென்னை பனையூர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அவர் காலை 10 மணி முதல் நடிகர் விஜய்யை பார்க்க காத்திருந்த நிலையில் அவரின் காரை மறித்தார். இருப்பினும் அஜிதாவை கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் கட்சி அலுவலகத்தின் முன்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜை  நியமித்து தற்போது விஜய் அறிவித்துள்ளார். மேலும் பதவி கேட்டு அஜித்தா போராடிவரும் நிலையில் தற்போது புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளது தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.