தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவருடைய மகன் மனோஜ். இவர் தாஜ்மஹால், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் பல படங்களை இயக்கியும் உள்ளார்.இவருக்கு 48 வயது ஆகும் நிலையில் நேற்று திடீரென மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருடைய உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று மாலை அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயின் வீடு சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள நிலையில் பாரதிராஜாவின் வீட்டிற்கு நடந்தே சென்றார்‌. அவர் அங்கு மாலை அணிவித்து இயக்குனர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் இதே போன்று நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.