தமிழகத்தில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் கேளிக்கை வரியை தற்போது தமிழக அரசு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது. நீண்ட காலமாக திரைத்துறையினர் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.

தமிழ் திரைப்படத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த வரியால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இனி அந்த பிரச்சனை இருக்காது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த புதிய அறிவிப்பு திரை பிரபலங்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.