தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு 841 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயிர் காப்பீடு திட்டம்.

வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்குவதற்காக 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடி 2500 ஏக்கரில் மேற்கொள்ள 2.4 கோடி நிதி ஒதுக்கீடு.

புதிய பலா ரகங்களை பரவலாக்கவும் பலாவில் ஊடு பயிர் சாகுபடியை மேற்கொள்ளவும் பலா மதிப்பீட்டு கூட்டுதலுக்கு பயிற்சி வழங்கவும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மேலும் முந்திரி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் 10 கோடி மதிப்பீட்டில் முந்திரி வாரியம் அமைக்கப்படும்.