தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஐயா வைகுண்டரின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.