
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி மத்திய மந்திரி சோபா கரந்தலேஜே பேசி இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டி அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழர்களை இழிவாக பேசியுள்ளார். எனவே அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழர்களை இழிவு படுத்தி பேசியதால் அதே செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொதுவெளியில் மன்னிப்பு கேட்டால் தான் சரியாக இருக்கும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.