
தமிழகத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் கண் கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தற்போது அறிவித்துள்ளது.
அதாவது பயோமெட்ரிக் முறையில் முதியவர்களுக்கு கைரேகை ஸ்கேன் சரிவர பதியாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.