தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரணி பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில் இணைந்தார் விஜய தரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் விஜயதரணி. கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜகவில் இணைந்தார்.காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

தற்போது எம்எல்ஏவாக உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியானது. 2021 தேர்தலின் போது விஜயதரணிக்கு விளவங்கோட்டில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி கட்சியில் இணைக்க முயன்றது. 2021 தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் விஜய தரணிக்காக கடைசி வரை காத்திருந்தது பாஜக.