தமிழகத்தில் நள்ளிரவு முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது காலை 9 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வெளியில் செல்லும்போது மக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.