
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பொது தேர்வு தொடங்குகிறது. முன்னதாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் தேதி வெளியான நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சி நடைபெற்ற பள்ளிகளிலேயே தேர்வுகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.