தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டுள்ளது. இது தவறான புரிதலின் அடிப்படையில் அனுப்பப்பட்ட சுற்றரிக்கை என்று கருதி தற்போது தமிழக அரசு அதனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிலை செய்பவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தவறான புரிதலின் நோக்கத்தில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கருதியுள்ளனர்.

இதன் காரணமாகத்தான் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். குறிப்பாக திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பிய சுற்றறிக்கை படி மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம், பிளாஸ்டிக் தட்டுகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று 10 உறுதிமொழிகளை ஏற்றுள்ளனர். மேலும் இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அந்த அறிக்கையை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.