
தமிழ்நாட்டில் நேற்று முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 14 cm மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இதே போன்று காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது கடலூர், அரியலுர், பெரம்பலூர் மாவட்டத்திலும் கனமழையின் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருவதால் விடுமுறை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.