
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்று எம்எல்ஏ மரகதம் குமாரவேல் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் வழங்கினார்.
அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வரும் கவனித்து வருகிறார். மேலும் இது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.