தமிழகத்தில் வருடம்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடமும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் அதற்கு முன்பாக ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு இலவச வேஷ்டி சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களில் 90 சதவீதம் பேருக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 10-ம் தேதிக்குள் மீதமுள்ளவர்களுக்கும் வேஷ்டி சேலைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு திமுக ஆட்சியை போன்ற வேறு எந்த ஆட்சியிலும் இலவசமான வேட்டி  சேலைகள் தரமானதாக வழங்கப்படவில்லை என்று தற்போது அமைச்சர் காந்தி கூறிள்ளதோடு மேற்கண்ட தகவலையும் அவர்தான் கூறியுள்ளார். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலைகள் தொடர்பாக அமைச்சர காந்தி இந்த மாத இறுதிக்குள் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இதற்காக 1.77 கோடி வேஷ்டிகளும், 1.77 கோடி சேலைகளும் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.