
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதிப்பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது வாக்காளர் இறுதிப்பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12,390 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,11,74,027 ஆகும். அதன் பிறகு பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,24,29,803 ஆகும். மேலும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 9920 ஆகும்.