
சென்னையில் கனமழை காரணமாக, தமிழக அரசு சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (16.10.2024) விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையினால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது, சில பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு விரைவாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது அத்துடன் தீவீரமாக கண்காணித்து வருகிறது.