தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. வங்கக்கடலில் தற்போது டாணா புயல் உருவாகியுள்ள நிலையில் அது நாளை அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று இரவு ‌7 மணி வரை தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.