தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வணிக கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி உண்டு என்ற நடைமுறை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் பிறகு வணிகர் சங்கத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கான உதவித்தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.