தமிழ்நாட்டில் ஆன்லைன் பிளாட்ஃபாம்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்களின் வாழ்நிலையை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooter) வாங்கத் தலா ₹20,000 மானியம் வழங்க மொத்தமாக ₹4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த திட்டம் டெலிவரி ஊழியர்களின் வேலைச்சுமையை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பயன்படும் என அரசு தெரிவித்துள்ளது.
