
தமிழகத்தில் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற இருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அளிக்கப்பட இருந்த அரையாண்டு விடுமுறை தேதியும் மாற்றப்படும். அதாவது டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.