
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல் தளத்தின் பால்கனி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 40 பள்ளி மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில் காலை பிரார்த்தனை கூடம் நடைபெறுவதற்காக முதல் தளத்தில் பள்ளி மாணவர்கள் கூறிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.