டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் இந்த உண்மை தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்கு அனைத்து நீதிபதிகளும் ஒப்புதல் வழங்கியதால் உச்ச நீதிமன்ற இணையத்தில் சொத்து விவரங்களை வெளியிட இருக்கிறார்கள்.