
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த கும்பமேளா 114 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கிறார்கள். இங்கு திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானவர்கள் இதுவரை புனித நீராடிய நிலையில் இன்னும் ஏராளமான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள். இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக நேற்று இரவு டெல்லி ரயில்வே நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
முன்பதிவு இல்லாத ரயிலில் ஏராளமான பயணிகள் ஏற முயன்றதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 சிறுவர்கள், 11 பெண்கள் உட்பட உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லி ரயில்வே நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது ரயில்வே நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதில் காயமடைந்தவர்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.