டெல்லியின் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டைத் தூண்டிய பயங்கரவாதி டாக்டர் உமர் முகமது என்ற உமர் உன்-நபியின் வீடு இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் இடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமாவில் அமைந்துள்ள இந்த மருத்துவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்தான் என டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தத் தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் கட்டமைப்புகள் மீது மத்திய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, இந்த வீடு இடிப்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
