புதுடில்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டதால் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ளது. தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி  நடத்தப்பட்ட இந்த பேரணியில் ராகுல் காந்தியுடன்,  பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட பல எம்.பிக்களும் பங்கேற்றனர். போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரையும் காவலில் எடுத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.