நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை jeeadv.ac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் ஜேஇஇ நுழைவு தேர்வில் டெல்லியை சேர்ந்த வேத் லகோதி என்பவர் 360 க்கு 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு பெண்களில் மும்பையைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.