இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சுமார் 12 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று (செப்.30) இறுதி விசாரணைக்கு வந்தது.

விசாரணை நிறைவில், நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், தங்களது குழந்தையை சைந்தவி பார்த்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.

இதன் மூலம் இருவரின் திருமண வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பால் தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.