ஜப்பானின் க்யூஷூ பகுதியில் இன்று மாலை (ஏப்ரல் 2, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்த பகுதியை 6.0 ரிக்டர் அளவில் தாக்கிய இந்த நிலநடுக்கம், பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

நிலநடுக்கம் உணரப்பட்ட உடனே மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து வெளியில் ஓடி வந்தனர். குறிப்பாக, பல உயரமான கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிகவும் தெளிவாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெரிய அளவிலான சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவசர உதவித்துறைகள் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.