
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த போட்டிகள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள நிலையில் book my show தளத்தில் நிகழ்ச்சிக்கான டிக்கெட் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.